முக அழகிரி வீடு பூட்டை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள்...அடுத்து காத்திருந்த சஸ்பென்ஸ்..?
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி சொந்தமான பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
முக அழகிரி
மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போதும் முக்கிய திமுக தலைவர் என்றால் அது முக அழகிரி தான். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த அவர், சிறிது காலத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி நின்றாலும், மிக பெரிய ஆதிக்க சக்தியாக இருந்த அவரை சுற்றி இன்னும் அரசியல் பேச்சுக்கள் தொடர்ந்து நீடித்து கொண்டே இருக்கின்றன.
அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முக அழகிரியின் மகனை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று மருத்துவமனையில் நலம் விசாரித்து வந்தார்.
பூட்டை உடைத்து
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் முக அழகிரி க்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. பண்ணை வீடு என்பதால் இங்கு எப்போதும் காவலாளி மற்றும் பண்ணை பணிக்கு செல்பவர்கள் மட்டுமே இருப்பார்கள்.
இதனை பயன்படுத்தி கொண்டு இரவு நேரத்தில் முக அழகிரியின் பண்ணை வீட்டின் கதவை உடைத்து சில மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், திடீர் சத்தம் கேட்டதால் காவலாளி உடனே உள்ளே சென்றுள்ளார். காவலாளியை கண்ட மர்மநபர்கள் தப்பியோடு மறைந்து உள்ளனர்.
தலைமறைவானதால் கொள்ளை அடிக்க வந்தவர்கள் யார்..? என்பது தெரியவில்லை. இது குறித்து காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.