முக்கிய அறிவிப்பு; திரையரங்குகள் இயங்காது - உரிமையாளர்கள் சங்கம் முடிவு!
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலையொட்டி பொது விடுமுறை அன்று திரையரங்குகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்று வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.முதல்கட்ட வாக்குப்பதிவானது தமிழகம் உட்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு செய்யப்படுகிறது. மக்கள் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்ய அன்றைய நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்கு இயங்காது
அதன்படி, தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடியவிடுப்பு வழங்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளது.
அதனால் அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகள், டாஸ்மாக் கடைகள் என முற்றிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், திரையரங்குகளும் இயங்காது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இருப்பினும், மளிகைக் கடைகள், மருந்தகங்கள், பால் கடைகள் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த வித பாதிப்பும் நேராது என தெரிவித்துள்ளனர்.