அஸ்வினுக்கு பதில் இனி இவர்தான்.. அணியில் இடம்பிடித்த இளம் வீரர் - யார் தெரியுமா?
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மாற்றாக அணியில் இடம்பிடித்த இளம் வீரர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அஸ்வின்
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. அதன் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
இதனையடுத்து, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மாற்றாக அணியில் எந்த வீரர் இடம் பெறுவார் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. தற்பொழுது இது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் மகாராஷ்டிரா வீரர் தனுஷ் கோட்டியான் முதல் முறையாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
இளம் வீரர்
அவருக்கு 26 வயது. 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மெல்போர்னில் நாளை மறுதினம் தொடங்குகிறது.இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 33 போட்டிகளில், 25.70 சராசரியில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் பேட்டிங்கில் 41.21 சராசரியில் 2523 ரன்கள் குவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான நடைப்பெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் தனுஷ் கோட்டியான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.