போட்டிக்கு நடுவில் அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு.. இதுதான் காரணம் - தந்தை பரபரப்பு பேச்சு!
அஸ்வின் ஓய்வு குறித்து அவரது தந்தை தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஸ்வின் ஓய்வு
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது . இந்த சூழலில் , இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு காரணம் ரோகித் சர்மா மற்றும் அஷ்வின் இடையே விரிசல் தான் என்று கூறப்படுகிறது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத அஷ்வின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடும் லெவனில் அனுமதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அஷ்வின் அறிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று சொந்த ஊரான சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பரபரப்பு கருத்து
அப்போதுஅஸ்வின் ஓய்வு அறிவிப்பு குறித்து அவரது தந்தை தெரிவித்துள்ளார்.அஸ்வின் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அவர் ஓய்வை அறிவித்து விட்டார். அதனை முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் அஸ்வினின் முடிவில் நான் தலையிட முடியாது.
ஆனால் அவர் ஓய்வை அறிவித்ததற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம் என்று சூசகமாகக் கூறினார். அது என்ன என்று அஷ்வினுக்கு மட்டும்தான் தெரியும். அவமானத்தினால் கூட அவர் ஓய்வை அறிவித்ததற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.