வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் நெளிந்த புழுக்கள்..!
திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் புழு
கடந்த 25 ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுவுக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சில மர்மநபர்கள் கல்வீசினர். இதையடுத்து ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
இதனிடையே நேற்று இந்த ரயிலின் இ-1 பெட்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு பரோட்டா வழங்கப்பட்டது. அப்போது அதில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டா பார்சலில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அந்த பரோட்டா பார்சலை அப்படியே மூடி வைத்துவிட்டார். ரயில் காசர்கோடு ரயில் நிலையம் சென்றதும் இது பற்றி நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார்.