சென்னை- கோவை இடையே வந்தே பாரத் இரயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடி சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் இரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்
தமிழகம் வந்த பிரதமர்
ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். அவர்களுடன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜி.கே.வாசன் ஆகியோரும் பிரதமரை வரவேற்றனர்.
வந்தே பாரத் ரயில்
சென்னை விமான நிலையத்தில் வெளியே வந்த பிரதமர் மோடி மக்களை பார்த்து கையசைத்தார் அதன் பின்னர் புதிய விமான நிலையத்தின் முனையத்தை திறந்து வைத்தார்.
இந்த நிலையில் சாலை மார்க்கமாக சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தார்ட் அங்கு சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தார்