உலகின் மிகப்பெரிய பாதாள நகரம்; பூமிக்கு அடியில் பழமையான ஒரு அதிசயம் - எங்கு தெரியுமா?

Turkey World
By Jiyath May 26, 2024 04:18 AM GMT
Report

உலகிலேயே மிகப்பெரிய மற்றும் பழமையான பாதாள நகரம் குறித்த தகவல். 

பாதாள நகரம்

துருக்கி நாட்டில் Derinkuyu என்ற பாதாள நகரம் உள்ளது. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய மற்றும் பழமையான பாதாள நகரம். சுமார் 1000 ஆண்டுகள் மக்கள் இந்த நகரத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த நகரம் பூமிக்கடியில் 85 மீ ஆழத்தில் அமைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பாதாள நகரம்; பூமிக்கு அடியில் பழமையான ஒரு அதிசயம் - எங்கு தெரியுமா? | The Worlds Largest Underground City Derinkuyu

மேலும், அதில் 18 அடுக்கடுக்கான சுரங்கங்கள் உள்ளன. கடந்த 1920-ம் ஆண்டு, கிரேக்க மற்றும் துருக்கிய போரின்போது கிரேக்கர்கள் இந்த நகரத்தை கண்டுபிடித்து உள்ளனர். இங்கு சிறு சிறு இடங்களாக கிட்டத்தட்ட 200 இடங்கள் சுரங்கம் மூலமாக இணைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

'Iron Man' சிறுவன் - இடது கை இல்லாமல் பிறந்தவருக்கு பொருத்தப்பட்ட பயோனிக் கை!

'Iron Man' சிறுவன் - இடது கை இல்லாமல் பிறந்தவருக்கு பொருத்தப்பட்ட பயோனிக் கை!

600 நுழைவாயில்கள் 

போர்களில் இருந்தும், மதச் சண்டைகளில் இருந்தும், இயற்கைப் பேரிடர்களில் இருந்தும் தப்பிப்பதற்காக மக்கள் இந்த பாதாள நகரத்தில் தங்கியுள்ளனர். மேலும், இது கிட்டத்தட்ட 20,000 மக்கள் வாழக்கூடிய நகரம் என்றும் கூறப்படுகிறது. துருக்கியில் உள்ள வீடுகளிலிருந்து இந்த நகரத்திற்கு சுமார் 600 நுழைவாயில்கள் இருந்தன.

உலகின் மிகப்பெரிய பாதாள நகரம்; பூமிக்கு அடியில் பழமையான ஒரு அதிசயம் - எங்கு தெரியுமா? | The Worlds Largest Underground City Derinkuyu

அதேபோல், உணவு சேகரிப்பு கிடங்கு, கால்நடைகளுக்கான இடம், பள்ளிகள், மாடிகள், சர்ச்கள் என அனைத்தும் இந்த நகரத்தில் இருந்துள்ளது. மேலும், இந்த பாதாள நகரம் 100 கிலோ எடைக்கொண்ட கதவுகளையும், வென்டிலேஷன் வசதியையும் கொண்டுள்ளது. இந்த நகரம் கடந்த 1985-ம் ஆண்டு Unesco World Heritage பட்டியலில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.