திருட சென்ற இடத்தில் உண்டியலில் மாட்டிய கை - இரவு முழுவதும் திருடன் கண்ணீருடன் தவிப்பு!

Telangana
By Swetha Apr 06, 2024 04:22 AM GMT
Report

கோயிலில் திருட முயன்ற போது உண்டியலில் திருடன் கை சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் உண்டியல்

தெலங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரப்பள்ளி கிராமத்தில் மசுபல்லே போஷம்மா என்ற கோயில் அமைந்திருக்கிறது.இங்கு சுரேஷ் என்பவர் கோயில் பணிகளை செய்து வந்திருந்தார்.

திருட சென்ற இடத்தில் உண்டியலில் மாட்டிய கை - இரவு முழுவதும் திருடன் கண்ணீருடன் தவிப்பு! | The Thiefs Had Caught In Hundiyal And Got Trapped

அப்போது, உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற திட்டம் அவருக்குள் இருந்து வந்திருந்து. இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை இரவு கோயிலுக்குள் நுழைந்த அவர், கோயில் கருவறைக்கு முன்னால் இருந்த உண்டியலை எடுத்து அதன் பணம் போடும் வாயிலை சேதம் படுத்தி அவரது கையை உள்ளே விட்டுள்ளார்.

கலகலப்பு திரைப்பட பாணியில் திருட போன இடத்தில் ஜன்னலில் சிக்கிய திருடன்!

கலகலப்பு திரைப்பட பாணியில் திருட போன இடத்தில் ஜன்னலில் சிக்கிய திருடன்!

தவித்த திருடர்

உண்டியல் உள்ளே எளிதாக சென்ற கை பணத்தை அள்ளிய பிறகு வெளியே எடுக்க முடியாமல் திணறியுள்ளார். இதனால் அவரது கை வசமாக சிக்கிக் கொண்டதை அவர் அறிந்தார் . இதையடுத்து, யாரேனும் பார்பதுக்குள் தனது கையை எடுத்துவிட வேண்டும் என்று பல முயற்சிகளை செய்த அவருக்கு தோல்விதான் வந்தது.

திருட சென்ற இடத்தில் உண்டியலில் மாட்டிய கை - இரவு முழுவதும் திருடன் கண்ணீருடன் தவிப்பு! | The Thiefs Had Caught In Hundiyal And Got Trapped

சுமார் 2 மணி நேரம் கையை எடுக்க முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார். இதை தொடர்ந்து, மறுநாள் காலை பூசாரி மற்றும் மற்ற ஊழியர்கள் கோயிலை திறந்து பார்த்தபோது, ​​சுரேஷ் உண்டியலுக்குள் கையேடு நிற்பதைக் கண்டு அதிர்ச்சயடைந்தனர்.

பின் கை மாட்டிக் கொண்டிருப்பதை கண்டதும் அவர் திருட முயற்சித்தது அவர்களுக்குத் தெரியவந்தது. இந்த தகவலறிந்து வந்த போலீசார் கட்டர் மூலம் உண்டியைலை உடைத்து அவரை விடுவித்தனர். பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.