மாற்றப்படும் தமிழக அமைச்சரவை - பிடிஆர் இலாக்கா மாற்றமா?
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உதயநிதிக்கு அமைச்சர் பதவி
அப்போது போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் அத்துறையில் இருந்து விடுவிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
பின்னர் கடந்த டிசம்பர் 14ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார்.

அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்றும் முதலமைச்சர்
இதையடுத்து டிசம்பர் 15ம் தேதி அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த நிலையில், துறைவாரியான அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று துறை ரீதியான செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் ஆடியோ விவகாரம் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாறுதலை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.