உயிரிழந்த தாய்.. உடலை சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற மகன் - போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
உயிரிழந்த தாயின் உடலை மகன் சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த தாய்
திருநெல்வேலி மாவட்டம் மீனவன்குளம் மாதாகோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெபமாலை -சிவகாமியம்மாள் தம்பதியினர். இவர்களது 38 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட பாலன் என்ற மகன் உள்ளார்.இந்த நிலையில் 60 வயதான சிவகாமியம்மாளுக்கு கடந்த ஜனவரி 11ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாலன் சைக்கிளில் 15 கி.மீ. தூரம் பாலன் அழைத்துச் சென்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார்.
பின்பு சிகிச்சை பிறகு வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் நேற்று மீண்டும் மீண்டும் சிவகாமியம்மாளுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நேற்று காலை உணவு அருந்தியபிறகு அவரை காணவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் வாகன சோதனை மேற்கொண்டார்.
மகன் செய்த செயல்
அந்த சமயத்தில், மூன்றடைப்பு பகுதியில் உள்ள பாலத்தில் பாலன், தனது தாயைச் சைக்கிளில் பின்னால் உட்கார வைத்து கயிற்றால் கட்டி தனது ஊருக்கு அழைத்துக் கொண்டு சென்று வந்துள்ளார்.
அவரை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் வந்து பார்த்தபோது, சிவகாமியம்மாள் உயிரிழந்த நிலையிலிருந்துள்ளார்.ஆனால் தாயார் இறந்தது கூட பாலனுக்குத் தெரியவில்லை.
இது குறித்து காவல்துறையினர் பாலனிடம் விசாரித்த போது அரசு மருத்துவமனையில் உணவு கொடுத்தபோது அவர் சாப்பிடவில்லை என்பதால் வீட்டுக்கு அழைத்துவந்ததாகக் கூறினார்.இதனையடுத்து சிவகாமியம்மாள் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.