மனைவியைக் கொன்ற கணவர்..உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி குக்கரில் வேக வைத்த கொடூரம் - பகீர் பின்னணி!
மனைவியைக் கொன்று உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி குக்கரில் வேக வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி மாதவி. இவர்களுக்குத் திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாதவியின் குடும்பத்தினர் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குருமூர்த்தியிடம் விசாரித்த போது முன்னுக்கு முரணாகப் பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகினர்.குருமூர்த்தி முன்னாள் ராணுவ வீரராக பணியாற்றியுள்ளார். சம்பவத்தன்று, குருமூர்த்திக்கும் மாதவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
திடுக்கிடும் தகவல்
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.பின்னர் மனைவி மாதவியின் உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி பிரஷர் குக்கரில் வேகவைத்து ஏரியில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து குருமூர்த்தி தனது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் குளத்தில் வீசப்பட்ட மாதவியில் உடல்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.