கனமழை எதிரொலி - ஒரே நாளில் தக்காளி விலை..எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ஒரே நாளில் ரூ.50 குறைந்து உள்ளது.
கனமழை
கனமழை எச்சரிக்கை காரணமாக நேற்று தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ஒரே நாளில் ரூ.50 குறைந்துள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அனைவரும் காய்கறி கடைகளில் முண்டியடித்துக்கொண்டு கிலோ கணக்கில் காய்கறிகளை வாங்கி இருப்பு வைத்ததால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது.
இதனால் தி.நகர், தாம்பரம், கோயம்பேடு, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், தக்காளி, பால், பிரெட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பல இடங்களில் விற்றுத் தீர்ந்தன.
தக்காளி விலை
இதற்கிடையே, நேற்று சென்னையில் காய்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்தது. தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் அதிகரித்து, ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல், வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60க்கும், கேரட் ரூ.60 முதல் ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது.