3 சகோதரிகளுடன் திருமணம் - டைம் டேபிள் போட்டு காதல் செய்யும் இளைஞர்!

Marriage Viral Photos Kenya
By Sumathi Feb 06, 2023 05:17 AM GMT
Report

3 சகோதரிகளை ஒரே ஆண் திருமணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

3 சகோதரிகள்

கென்யாவைச் சேர்ந்தவர்கள் சகோதரிகள் கேத், ஈவ் மற்றூம் மேரி. இவர்கள் காஸ்பல் இசையில் பணிபுரிந்து வருகின்றனர். மூவரும் ஸ்டீவோ என்ற ஒரே நபரை திருமணம் செய்துள்ளனர். கேத் தான் முதலில் ஸ்டீவோவை சந்தித்துள்ளார்.

3 சகோதரிகளுடன் திருமணம் - டைம் டேபிள் போட்டு காதல் செய்யும் இளைஞர்! | The Person Who Married 3 Sisters At The Same Time

பின்னர், அவர் மூலம் மற்ற இரு சகோதரிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் பழகிய பிறகு மூன்று பேரையும் திருமணம் செய்ய முடிவு செய்ததாக ஸ்டீவோ கூறியுள்ளார். இதுகுறித்து ஸ்டீவோ பேசுகையில், மூன்று பெண்களின் தேவைகளை திருப்திப்படுத்துவது சாத்தியமானதா என கேட்பவர்களுக்கு ஒன்றை கூறுக்கொள்கிறேன்,

ஒரே ஆணுடன் திருமணம்

மூன்று பேரையும் திருப்திப் படுத்துவது எனக்கு சிரமமாக இல்லை. அது ஒரு பெரிய விஷயமே கிடையாது என்றார். 3 பேருடனும் சமமாக நேரம் செலவிட நான் கடுமையான அட்டவணையை பின்பற்றுகிறேன்.

வாரந்தோறும் திங்கட்கிழமைகளை மேரிக்காகவும், செவ்வாய்க்கிழமைகளை கேத்திற்காகவும், புதன்கிழமைகளை ஈவிற்காகவும் ஒதுக்கியுள்ளேன் என்றார். ஆனால் அதேநேரத்தில் மூன்று சகோதரிகளும் குடும்பம் மற்றும் பிற தேவைகளை பூர்த்திசெய்வதில் கொஞ்சம் சிரமாக இருப்பதாக கூறுகின்றனர்.

மேலும் தாங்கள் மூன்று பேர் மட்டும் ஸ்டீவோவிற்கு போதுமானவர்கள் என்றும், வேறொரு பெண்ணை வாழ்க்கைக்குள் கொண்டுவர நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர்.