ஒரே நேரத்தில் 3 பேரை திருமணம் செய்த நபர் - 90’ஸ் கிட்ஸ் பாவம் தான்..!
காங்கோ நாட்டில் ஒரே நேரத்தில் 3 பேரை திருமணம் செய்த நபர் தான் 90’ஸ் கிட்ஸ்களின் பேசுபொருளாக மாறியுள்ளார்.
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் அங்கு சர்வ சாதாரணமாக அத்தகைய திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் காங்கோ நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள தெற்கு கிவுவை சேர்ந்தவர் லுவிசோ என்ற வாலிபர் ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். ருவாண்டாவின் எல்லைக்கருகிலுள்ள தெற்கு கிவுவில் அமைந்துள்ள கலேஹேவில் இந்த திருமணம் நடைபெற்ற நிலையில் 3 சகோதரிகளும் திருமணம் செய்து கொள்கிறாயா என லுவிசோ முன்மொழிந்தபோது மகிழ்ச்சியுடன் ஆம் என்று கூறியுள்ளனர்.
லுவிசோ நடாஷா, நடாலி மற்றும் நடேஜ் ஆகிய 3 சகோதரிகளை திருமணம் செய்துகொள்வதை லுவிசோவின் பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர்கள் திருமணத்தில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.
மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை. மூன்று சகோதரிகளை திருமணம் செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என லுவிசோ தெரிவித்துள்ளது 90’ஸ் கிட்ஸ்கள் இடையே பேசுபொருளாக உள்ளது.