என்னது.. பிரியாணியின் உண்மையான பெயர் பிரியாணி இல்லையா? சுவாரஸ்ய தகவல்!
பலருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்றான பிரியாணியின் உண்மையான பெயர் பற்றிய தகவல்.
பிரியாணி
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுவது பிரியாணி தான். இதில் ஹைதராபாத், ஆம்பூர், திண்டுக்கல் என பல்வேறு நகரங்களில் பல சுவைகளில் பிரியாணிகள் சமைக்கப்படுகிறது.
சாலையில் உள்ள கடைகளில் கிடைக்கும் பிரியாணி முதல் மிகப்பெரிய விலையுயர்ந்த உணவகங்களில் கிடைக்கும் பிரியாணி வரை அனைத்தும் சுவையால் மக்களவை கட்டிப்போட்டுள்ளது. மேலும், திருமணம், பண்டிகை, நிகழ்ச்சிகள் என மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களிலும், இடங்களிலும் பிரியாணி என்ற ஒன்று இல்லாமல் இருக்காது.
உண்மையான பெயர்?
இப்படி மக்களை மயக்கி வைத்திருக்கும் பிரியாணியின் உண்மையான பெயர் என்ன? அதற்கு ஏன் அந்த பெயர் வந்தது என்று யோசித்தது உண்டா? பிரியாணி என்னும் பெயர் உண்மையில் ‘பிரியன்’ என்ற சொல் மூலம் பெர்ஷிய மொழியிலிருந்து வந்தது. அதற்கு சமைப்பதற்கு முன் வறுப்பது’ என்று பொருள்.
இந்த பெயர் அரிசி என்ற பெர்ஷிய பொருள் கொண்ட ‘பிரிஞ்’ என்ற சொல்லிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்தியாவிற்குள் பிரியாணி எப்படி வந்தது? என்பதற்கு பல கருத்துக்கள் உள்ளது. ஆனால், மேற்கு ஆசியாவில் இருந்து தான் முதலில் பிரியாணி வந்ததாக கூறப்படுகிறது.