ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; மக்கள் போராட்டம் - போலீசார் அதிரடி!

Delhi India
By Jiyath Apr 24, 2024 04:53 AM GMT
Report

ராமர் படம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமர் படம்

டெல்லியின் ஜஹாங்கிர்புரி என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி பரிமாறப்படுவதாக வீடியோ ஒன்று வைரலானது. இதனால் கோபமடைந்த மக்கள் பலர் அந்த ஹோட்டல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; மக்கள் போராட்டம் - போலீசார் அதிரடி! | Ram Picture On Biryani Paper Plate In Delhi

இதுகுறித்தது தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அந்த ஹோட்டலின் உரிமையாளரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்!

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்!

போலீசார் விசாரணை 

அப்போது பிரியாணி பரிமாறப்பட்ட தட்டில் ராமர் படம் இருப்பது குறித்து தனக்கு தெரியாது என்று அவர் கூறினார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு தொழிற்சாலையில் இருந்து 1,000 பேப்பர் தட்டுகளை அவர் வாங்கியதும்,

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; மக்கள் போராட்டம் - போலீசார் அதிரடி! | Ram Picture On Biryani Paper Plate In Delhi

அதில் 4 தட்டுகளில் மட்டும் ராமர் படம் அச்சிடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளரை போலீசார் விடுவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.