தி.நகர் பிரமாண்ட ஆகாய மேம்பாலம் இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir May 16, 2023 05:40 AM GMT
Report

தி.நகர் பேருந்து நிலையம் - மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.

தி.நகர் ஆகாய மேம்பாலம் இன்று திறப்பு 

சென்னையின் மிகப் பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.28 கோடியே 45 லட்சம் செலவில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

தியாகராய நகர் வரும் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் மேட்லி சாலை சந்திப்பு வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில் இந்த ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

The Nagar Flyover inaugurated today

570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலத்தில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று மாலை இந்த ஆகாய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.