எருமை மாட்டின் வாய் கொண்டுள்ள மீன்..100 ஆண்டுகள் வரை வாழும் அதிசயம்-எங்க இருக்கு தெரியுமா ?
100 ஆண்டுகள் வரை வாழும் அதிசய மீன் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வட அமெரிக்கா
வட அமெரிக்காவைச் சேர்ந்த பிக்மௌத் பஃபல்லோ ஒருவகை மீன் இனம் ஆகும். இது மின்னிசோட்டா , வட கனடா உள்ளிட்ட ஏறிப்பகுதியில் காணப்படுகிறது. இது பொதுவாக கர்ட்ஹெட் , மார்பிள்ஹெட் , ரெட்மவுத் எருமை , எருமை மீன் , பெர்னார்ட் எருமை , வட்ட தலை அல்லது பழுப்பு எருமை என்று அழைக்கப்படுகிறது .
இதற்கு காரணம் மீனின் வாய் எருமைமாடின் வாய் வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன் துடுப்புகளுடன் கூடிய பழுப்பு நிற ஆலிவ் நிறமாக இருக்கும். மேலும் 4 அடி (1.2 மீ) மற்றும் 80 பவுண்டுகள் (36 கிலோ) எடையை விட அதிகமாக இருக்கும். குறிப்பாக இந்த வகையான மீன் நன்னீரில் நீண்ட காலம் வாழும்.
இவற்றில் சில, மீன்கள் 100 ஆண்டுகள் வரையும் வாழும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக்மௌத் பஃபல்லோ மீன் எப்படி நீண்ட காலத்திற்கு வாழ்கின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. உலகிலேயே மிகப் பழமையான விலங்குகளுள் ஒன்று என்று தெரியவந்துள்ளது.
அதிசய மீன்
இந்த மீனின் 127 வயது வரை வரை வாழக்கூடியது. பிக்மௌத் பஃபல்லோ மீனில் நியூட்ரோபில் - லிம்போசைட் அதிக அளவில் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பது உதவுகிறது. இதனால் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆச்சரியம் என்னவென்றால் இந்த வகையான மீன்கள் ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் முட்டையிட்டு,
கோடைக்காலத்தின் இறுதியிலேயே புதிய இளம் மீன்குஞ்சுகளை இனப்பெருக்கம் செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இந்த மீன் இடம்பிடித்துள்ளது. தொடர்ந்து பிக்மௌத் பஃபல்லோ மீன் குறித்து ஆய்வுகள் நடந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.