வகுப்பறைக்குள் புகுந்து துப்பாக்கியை காண்பித்து மாணவர்களை மிரட்டிய நபர் - பாய்ந்து பிடித்த போலீஸ்காரர்

Viral Video West Bengal
By Thahir Apr 27, 2023 09:27 AM GMT
Report

மேற்குவங்கத்தில் வகுப்பறைக்குள் புகுந்து துப்பாக்கி காண்பித்து மாணவர்களை மிரட்டிய நபரை போலீஸ்காரர் அசாருதீன் பாய்ந்து பிடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வகுப்பறைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மாணவர்களுக்கு மிரட்டல் 

மேற்குவங்க மாநிலம் மால்டா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வகுப்பறையில் இருந்த மாணவர்களை மிரட்டியுள்ளார்.

மேலும் அந்த நபர் ஆசிட் நிறைந்தத பாட்டில்களையும் தனது கையில் வைத்திருந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்தனர்.

The man threatened the students with a gun

பள்ளியில் மர்ம நபர் புகுந்து மாணவர்களை மிரட்டுவதை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு அவரிடம் சாதுரியமாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுப்பட்டது.

அங்கு வந்த போலீசாரும் அவருடன் பேச்சு கொடுத்து வெளியே வரும்மாறு அழைத்துள்ளனர். அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாத அந்த நபர் தொடர்ந்து துப்பாக்கியை காட்டியவாறு மாணவர்களை மிரட்டி வந்துள்ளார்.

துணிச்சலுடன் பாய்ந்து பிடித்த போலீஸ்காரர் 

பின்னர் அங்கிருந்து அசாருதீன் என்ற போலீஸ்காரர் ஒருவர் சமர்த்தியமாக துப்பாக்கியுடன் இருந்த நபரை பாய்ந்து பிடித்தார்.

The man threatened the students with a gun

இதையடுத்து அந்த நபரை உள்ளூர் மக்கள் உதவியுடன் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.தொடர்ந்து வகுப்பறையில் இருந்த மாணவர்களை போலீசார் வெளியே அனுப்பினர்.

அவரை பிடித்துச் சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ராஜு பல்லவ் என்பது தெரியவந்துள்ளது. வகுப்பறைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மாணவர்களை மிரட்டிய நபரை பிடித்த போலீஸ்காரர் அசாருதீனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.