கெஞ்சி கதறிய ஆண்; காரை வைத்து இளம்பெண்கள் கொடூரம் - பதைபதைக்கும் வீடியோ!
வாலிபரை கெஞ்ச விட்டு, இளம்பெண்கள் கார் ஓட்டி சென்ற காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கதறிய ஆண்
டெல்லியில், காரின் முன்புறத்தில் ஒரு வாலிபரை படுக்க வைத்தபடி இளம்பெண்கள் காரை ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சச்சின்குப்தா என்பவரது இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ படம் பிடிக்கப்பட்டதாக தெரிகின்ற நிலையில், சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதோடு கடும் விவாதத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
ஓட்டிய பெண்கள்
அந்த பதிவில், காருக்குள் இருக்கும் 2 இளம் பெண்கள் காரை இயக்குகிறார்கள். காரின் முன்பகுதியில் படுத்திருக்கும் ஆண், கைகளை கூப்பி அவர்களிடம் கெஞ்சுவதுபோல அதில் தெரிகிறது. மேலும், உள்ளே இருக்கும் பெண்கள் அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே காரை நிறுத்தாமல் ஓட்டிச் செல்கிறார்கள்.
இது திட்டமிட்டு டிரெண்டிங் ஆவதற்காகவே எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம், அல்லது காரில் படுத்து தூங்கியவரை கோபத்தில் தண்டிப்பதற்காக பெண்கள் காரை ஓட்டிச் சென்றார்களா என்பது பற்றி தெரியவில்லை.
இந்த சம்பவத்தை கடித்து பலரும் கண்டன கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்,போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.