வெளியே வரவேண்டாம்; தி கேரளா ஸ்டோரி படக்குழு நபருக்கு பகீர் மிரட்டல்!
‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படக்குழுவை சேர்ந்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி கேரளா ஸ்டோரி
ஹிந்தி திரைப்பட இயக்குனரான சுதிப்தோ சென் இயக்கிய படம் ‛தி கேரளா ஸ்டோரி'. அண்மையில், படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு

கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்படுவதாக கூறப்பட்டதால் விவாதத்திற்குள்ளானது. அதனையடுத்து, 32 ஆயிரம் பெண்கள் என்பதற்கு பதில் 3 பெண்கள் என மாற்றம் செய்யப்பட்டது.
மிரட்டல்
இந்த படம் தமிழ்நாட்டிலும் கடந்த 5ம் தேதி ரிலீசானது. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவில் தியேட்டர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்சனை, படத்திற்கு வரவேற்பு இல்லாமை போன்ற காரணத்தினால் திரைப்படம் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன.
இந்நிலையில், மும்பையில் வசித்து வரும் படக்குழுவை சேர்ந்தவருக்கு மெசேஜ் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛படத்தின் கதையில் நல்ல விஷயத்தை காட்டவில்லை.
வீட்டில் இருந்து தனியாக வெளியே வர வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யாத நிலையிலும், அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.