தி கேரளா ஸ்டோரி படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளும், ஆதரவும்
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில்,படத்தை வெளியிட கூடாது என பலதரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து வந்தது. ஆனால், படம் கடந்த 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதனையடுத்து படம் வெளியாகியுள்ள நிலையில், பலரும் படத்தை தடை செய்யவேண்டும் என்றும், பலரும் படத்திற்கு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இப்படம் குறித்து கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்,
எல்லோரும் படம் பார்க்க வேண்டும்
“இந்த கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்கலாம் என்று நினைக்கிறேன் படம் ஐஎஸ்ஐஎஸ் எதிராக இது சித்தரிக்கப்படுகிறது.

எனவே அதற்கு யார் ஆதரவாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு எதிரானது என்று நினைப்பார்கள்.
தீவிரவாதத்திற்கு எதிரானது என்று நினைத்தால் நமக்கு ஆதரவான படம் என்று நினைப்பார்கள் அது அவரவர்களின் மன நிலையை பொறுத்தது.
பிரதமர் மோடி சொன்னது போல தீவிரவாதம் எந்த இடத்தில், எந்த ரூபத்தில் வந்தாலும் அது ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று. ’தி கேரளா ஸ்டோரி’ படம் பெண்களையும், இளைஞர்களையும் பாதிக்கும் வகையில் இருந்தால் அதன் உண்மை தன்மையை அறிய வேண்டும். தீவிரவாதத்தைப் பற்றி கேரளாவில் சட்டமன்றத்திலேயே பேசப்பட்டிருக்கிறது.
இவர்களுக்கு வேண்டிய கருத்தை வைத்து படம் எடுத்தால் கருத்து சுதந்திரம். ஆனால், சொல்ல வேண்டிய கருத்தை வைத்து எடுத்தால் கருத்து சுதந்திரம் கிடையாது உடனே தடை செய்வீர்கள்.
எல்லாரும் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் நாங்க எல்லாம் பார்க்க போகிறோம். ஆக உண்மை தன்மை எங்கு இருந்தாலும் அதனை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என கூறியுள்ளார்.