கோடிக்கோடியா காணிக்கை; அள்ளிதரும் பக்தர்கள் - ராமர் கோவில் ஒரு மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

Narendra Modi Ayodhya Ayodhya Ram Mandir
By Swetha Feb 27, 2024 12:32 PM GMT
Report

ராமர் கோவில் திறந்த ஒரு மாத்தத்தில் கோடிக்கணக்கில் காணிக்கையை பக்தர்கள் வாரி வழங்கியதாக தெரியவந்துள்ளது.

ராமர் கோவில்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட்டது. கடந்த மாதம் பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்து கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்தார்.

ayodhya ram mandir

பிரதமர் திறந்து வைத்த நாள் தொடங்கி ஆயிரக்கணக்கான வி.வி.ஐ.பி.கள் மட்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்டு குழந்தை ராமரை தரிசனம் செய்தனர்.

இதையடுத்து, மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்ட நாள் முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

500 வருட போராட்டம்...1528 - 2024 பாபர் மசூதி - ராமர் கோவில்..! முழு வரலாறு தெரியுமா..?

500 வருட போராட்டம்...1528 - 2024 பாபர் மசூதி - ராமர் கோவில்..! முழு வரலாறு தெரியுமா..?

காணிக்கை வருமானம்

இந்த நிலையில், கோவில் திறந்து ஒரு மாதத்தில் உண்டியலில் காணிக்கையாக கிடைத்த வருமானத்தின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கோடிக்கோடியா காணிக்கை; அள்ளிதரும் பக்தர்கள் - ராமர் கோவில் ஒரு மாத வருமானம் எவ்வளவு தெரியுமா? | The Income Of Ayodhya Ram Mandir Hundi

இதுகுறித்து ராமர் கோவில் அறக்கட்டளையின் அலுவலக பொறுப்பாளர், ”கோயில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் ரூ.25 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 10 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி நகைகள், காசோலை, என கோயில் உண்டியலில் கிடைத்த காணிக்கை என மொத்தம் ரூ.25 கோடி கிடைத்துள்ளது” என்று கூறினார்.

மேலும், ”ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெள்ளி, தங்க நகைகளை நன்கொடையாக அளிக்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 லட்சம் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். ராம் லல்லாவுக்கு நன்கொடையாக பெறப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களை பராமரிப்பதற்காக அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்”என குறிப்பிட்டுள்ளார்.