500 வருட போராட்டம்...1528 - 2024 பாபர் மசூதி - ராமர் கோவில்..! முழு வரலாறு தெரியுமா..?
இன்று மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாகியிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
ராமர் கோவில் வரலாறு..?
ராமர் கோயில் ராமரின் பிறப்பு இடமான அயோத்தியில் நீண்ட ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கட்டப்பட்டுள்ளது. தொல்பொருள், இலக்கியச் சான்றுகளின் படி, கி.மு. 5 அல்லது 6 நூற்றாண்டின் தொடர்பு இங்கு முன்னர் இருந்த கோவிலுக்கு உள்ளது.
இந்து சாஸ்திரங்களின்படி, அயோத்தி பண்டைய கோசல சாம்ராஜ்யத்தின் தலைநகராக ராமரின் தந்தையான தசரத மன்னரால் ஆளப்பட்ட நகரமாகும். இன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள ராமர் கோவில் கடந்து வந்த பாதை கடந்த 1528-ஆம் ஆண்டு துவங்கப்பட்டதாகும்.
அந்த ஆண்டு முகலாயப் பேரரசரின் படைத்தளபதி மிர் பாகியால் பாபர் மசூதி கட்டப்பட்டது. 1853 ஆம் ஆண்டின் முகலாய மன்னர் பாபர் ஆட்சிக் காலத்தில் ராமர் கோயில் ஒன்று இடிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து பெரிய கலவரம் வெடித்ததாகவும் வரலாற்று ஆய்வுகள் உள்ளன.
கடந்த 1885-ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடத்தைச் சுற்றி சுவர் எழுப்ப பைசாபாத் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபர் தாஸ் என்பவர் மனு தாக்கல் செய்ய அதனை நீதிமன்றம் நிராகரித்தது. அதனை தொடர்ந்து 1894 டிசம்பர் 22-ஆம் தேதி இரவு அந்த இடத்தில் மசூதிக்கு வெளியே ராமர்,சீதா சிலைகள் வைக்கப்பட்ட, பெரும் பிரச்சினை எழ, இடம் பூட்டப்பட்டது. இதற்கு இந்து, முஸ்லிம் தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தை நாடினர்.
கோபால் சிம்லா விஷாரத், பரமஹம்ச ராமச்சந்திர தாஸ் போன்றவர்கள் 1950 -இல் ராமர் சிலையை வழிபட அனுமதி கோரி பைசாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அப்போது பூஜை செய்ய அனுமதி கிடைக்க பெற்ற போதிலும், அவ்விடத்தின் சர்ச்சைக்குரிய மையப்பகுதி பூட்டியே இருந்தது.
அதனை தொடர்ந்து 1959-இல் நிர்மோஹி அகாரா அமைப்பு அந்த இடத்துக்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், 1961-ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியமும் உரிமை கோரி மனுத்தாக்கல் செய்தது. பிப்.1, 1986-ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தை திறக்குமாறு உள்ளூர் நீதிமன்றம் இந்து மதத்தினர் மட்டும் வழிபாடு நடத்த உத்தரவிட்டது.
இந்த நிகழ்வுகளை தொடர்ந்து, உத்திரபிரதேசத்தில்1991-ஆம் ஆண்டு கல்யாண் சிங் தலைமையில் பாஜக ஆட்சி அமைய டிச.2, 1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
மசூதி இடிப்பை தொடர்ந்து மத்திய அரசு ஏப்.3, 1993-இல் சர்ச்சைக்குரிய இடத்தின் சில ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அயோத்தியா சட்டத்தைக் கொண்டுவந்தது நிலையில், அந்த சட்டத்தை எதிர்த்து இஸ்மாயில் பரூக்கி என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து நிலையில்.
அந்த வழக்குகளில் அக்.24, 1994-இல் சர்ச்சைக்குரிய இடம், இஸ்லாம் மதத்தின் ஒரு அங்கம் அல்ல என்று பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் 2002-இல், அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தத் தொடங்கிய பின்னர் 2003-ஆம் ஆண்டில், கையகப்படுத்த நிலத்தில் எந்தவிதமான மதவழிபாடுகளும் நடக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து 2010-ஆம் ஆண்டில் அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தை 2:1 என்ற விகிதத்தில் பிரித்து வக்பு வாரியம், நிர்மோகி அகாராவிற்கு பிரித்து அலகாபாத் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், 2011-இல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்தது. மீண்டும் 2016 -ஆம் ஆண்டில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு வழக்கு தொடர்ந்தார். அதனை தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அயோத்தி வழக்கில் அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும்படி ஆலோசனை வழங்கினார்.
ஆக்.7, 2017 -இல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது. 2018-ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது.பல நகர்வுகளுக்கு பிறகு, 2019-இல் மத்திய அரசு கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தது.வழக்கில் சமாதானம் ஏற்படுத்த மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டு, குழு இரு தரப்பினரிடமும் நீதிமன்றத்தில் பேசி இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது.
நவம்பர் 9-ஆம் தேதி 2019-இல் இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட வழங்கவும் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு அதிரடியாக உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து 2020 ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு அடிக்கல் நாட்டினார். அன்று துவங்கிய பணிகள் தற்போது 2024-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.