1000 அடி உயர மலையிலிருந்து கர்ப்பிணி மனைவியை கீழே தள்ளிய கணவன் - பகீர் பின்னணி!
7மாத கர்ப்பிணி மனைவியை மலையில் இருந்து கணவன் கீழே தள்ளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணி மனைவி
துருக்கி, அன்காராவைச் சேர்ந்தவர் ஹக்கான் அய்சல்(41). இவரது மனைவி செம்ரா(32). இவர்களுக்கு 8 வயதில் மகன் ஒருவர் உள்ளார். தற்போது கர்ப்பமாக உள்ள செம்ரா தனது உயிரை 25 ஆயிரம் டாலருக்கு (ரூ.20 லட்சம்) காப்பீடு செய்திருந்தார்.
இந்நிலையில், கணவருக்கு வேலை பறிபோனது. தொடர்ந்து அவர் சொந்த தொழில் செய்ய முடிவெடுத்தார். ஆனால் அவரிடம் அதற்கு போதிய பணமில்லை. இந்த வேளையில்தான் அவருக்கு மனைவி உயிரை காப்பீடு செய்திருப்பது தெரியவந்தது.
இன்சூரன்ஸ் பணத்திற்காக
இதனால் இந்த பணத்தை பெற மனைவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதனால், முக்லா பகுதியில் உள்ள பட்டர்ஃப்ளை எனும் சுற்றுலா தளத்திற்கு மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்தவர்கள் இறுதியில் உயரமான மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது 1000 அடி உயரம் கொண்ட மலை முகட்டுக்கு மனைவியை அழைத்துச் சென்று அங்கிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். அதன்பின் காவல்நிலையத்திற்கு சென்று மனைவி மலையில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ஒரு வாரம் கழித்து செம்ராவின் உடல் மீட்கப்பட்டு உறவினர்களுடம் ஒப்படைக்கப்பட்டது.
கணவரின் செயல்களால் சந்தேகமடைந்த போலீஸார் அவ்ரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் மனைவியின் இன்சூரன்ஸ் பணத்திற்காக அவரை கீழே தள்ளி கொன்றதை ஒப்புக்கொண்டனர். அதனையடுத்து அவரை கைது செய்து சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.