விடுமுறை எடுக்காமல் உழைத்த ஊழியர்கள்.. ரூ.64 லட்சத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்த உரிமையாளர் !
ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ஊழியர்களுக்கு ரூ.2.18 லட்சம் வரை போனஸாக கொடுத்துள்ளார்.
சீனா
சீனாவில் ஹூவாங் ஹூமிங் என்பவருக்குச் சொந்தமான கிலிச்சுவார் ஹாட்ஸ்பாட் என்ற பெயரில் ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த உணவகள் நாடு முழுவதும் எட்டு கிளைகளைக் கொண்டுள்ளது.இந்த ஹோட்டலில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் சீனாப்புத்தாண்டு முன்னிட்டு ஹோட்டலுக்கு அதிகமான மக்கள்கூட்டம் வரும் என்று முன்னதாக புரிந்துகொண்ட ஊழியர்கள் சுமார் 140 பேர் விடுமுறை எடுக்காமல் ஹோட்டலுக்கு வந்து வேலை பார்த்துள்ளனர்.
அதன்படி,கிலிச்சுவார் ஹாட்ஸ்பாட் உணவகத்தில் சீனாப்புத்தாண்டு அன்று மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.தொடர்ந்து முன்று நாட்கள் விற்பனை அமோகமாக இருந்தது. மூன்று நாட்களில் மட்டும் ரூ.1.2 கோடிக்கும் அதிகமாக விற்பனை நடந்துள்ளது.
போனஸ்
இதனால், மிகவும் மகிழ்ச்சி அடைந்த ஹோட்டல் உரிமையாளர் தனது ஊழியர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்துள்ளார்.அதன்படி,குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கும் ரூ 7200 - 8400 வரை போனஸாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தகுதிகளுக்கு ஏற்றபடி உள்ள ஊழியர்களுக்கு ரூ 84000 மும் உழைப்புக்கான போனஸாகவும், கிளை மேலாளர்களுக்கு ரூ.2.18 லட்சம் வரை போனஸாககொடுத்து இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார். இப்படி விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கு சுமார் ரூ.64 லட்சம் வரை போனஸாக கொடுத்துள்ளார்.