குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி!
ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன ஹாரி பாட்டர் புத்தகம் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இங்கிலாந்து
இங்கிலாந்து எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவரால் எழுதப்பட்ட ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்' என்ற புத்தகம் 1997ஆம் ஆண்டு வெளியானது. இந்த புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தொடர்ந்து ஜே. கே. ரௌலிங் அடுத்தடுத்த பாகங்களை எழுதினார்.இதனையடுத்து ஹாரி பாட்டர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு கதைகளுக்கு உயிரூட்டும் விதமாகத் திரைப் படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து ஆறு ஹாரிபாட்டர் புத்தகங்கள் ஜே. கே. ரௌலிங் எழுதினார்.2007ஆம் ஆண்டு வெளியான ‘ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ்’ புத்தகத்துடன் இந்த கதை நிறைவடைந்தது.இங்கிலாந்தின் பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனமான புளூ பெர்ரி தான் முதலில் "ஹாரிபாட்டர் அண்ட் பிலாசபர்ஸ் ஸ்டோன்" புத்தகத்தை வெளியிட்டது.
ஹாரி பாட்டர்
பின்னர் இந்த நாவல் பெரும் எண்ணிக்கையில் விற்பனையாகி உலக அளவில் பிரபலமடைந்தது.ரவுலிங் எழுதிய 7 ஹாரிபாட்டர் புத்தகங்கள் மூலம் இங்கிலாந்து ராணியின் சொத்து மதிப்பிற்கு இணையாகச் சம்பாதித்தார். இந்த நிலையில், டேனியல் பியர்ஸ் என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது உடைமைகளை அப்புறப்படுத்தினர்.
அப்போது ஹாரி பாட்டர் நாவலின் முதல் பதிப்பு புத்தகம் குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆன்லைன் ஏலத்தில் சுமார் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.