ஒரே ஒரு ரயில்தான்.. ஆண்டுக்கு ரூ.176 கோடி வருமானம் - அந்த ரயில் எங்கு ஓடுது தெரியுமா?
இந்தியாவில் அதிக வருமானம் பெற்றுத் தரும் ரயில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரயில்வே
ஒரு நாட்டின் ரயில்வே கட்டமைப்பு அந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உதவுகிறது. பயணிகளுக்கு நெடுந்தூர பயணங்களை மிகவும் மலிவாக அளிப்பதில் ரயில்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் , இந்தியாவில் அதிக வருமானம் பெற்றுத் தருகிறது.
குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் அதிக பிரபலமானவை. இதைத் தவிர்த்து பேசஞ்சர் ரயில்கள், லோக்கல் மற்றும் மின்சார ரயில்கள் என பொதுமக்களுக்குச் சேவையாற்றுகின்றன.இதில் நாள்தோறும் ரயில்கள் மூலம் சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
அதிக வருமானம்
இதன் மூலம் ரயில்வே போக்குவரத்தில் நல்ல வருமானம் கிடைக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட ரயிலில் மட்டும் ஆண்டுக்கு ரூ. 176 கோடி வருவாய் கிடைத்து வருகிறது என்றால் நம்ப முடிகிறாதா? இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.பெங்களூரு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் , டெல்லி நிஜாமுதீன் மற்றும் பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் ஆண்டுதோறும் 176 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.இரண்டாவது இடத்தில் சியால்தா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது ஆண்டுக்கு 128 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.