தெரிந்தவர் என்று நம்பி போன சிறுமி - புதருக்குள் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்
உதகையில் 14 வயதே ஆன பழங்குடியின சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த பக்கத்துக்கு வீட்டுக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதருக்குள் சடலமாக கிடந்த சிறுமி
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு கிளம்பிய சிறுமி, பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு காரில் வந்த ரஜ்னேஷ், சிறுமியை வீட்டில் ட்ராப் செய்துவிடுவதாக அழைத்திருக்கிறார். அந்த சிறுமியும் அவரை ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் என்பதால் அவரை நம்பி வண்டியில் ஏறியுள்ளார் என்று கூறப்படுகிறது.
அன்று மாலை வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை, அதனால் சந்தேகமடைந்த பெற்றோர் பள்ளியிலும், பல இடங்களிலும் தேடியும் காணவில்லை.
இந்நிலையில், இரவில் அங்கர்போர்டு அருகே புதருக்குள் பலத்த காயங்களுடன் மாணவி இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இளைஞர் கைது
மேலும், தகவல் அறிந்து பைக்காரா காவல் நிலைய போலீஸார் சென்று விசாரித்தனர். மாணவி உடல் அருகே ஒரு கார் நின்றுக்கொண்டிருந்தது.
அதனை விசாரித்ததில் கார், கக்கோடுமந்து பகுதியை சேர்ந்த ரஜ்னேஷ் குட்டன்(25) என்பவருக்கு சொந்தமானது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, சிறுமியை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதில் அவர் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ரஜ்னேஷ் குட்டனை கைது செய்யப்பட்டார்.