ஆர்டிக் பிரதேசத்தில் உருவான நன்மை தரும் ராட்சத வைரஸ் - இதற்கு தீர்வாக அமையுமா..?
ராட்சத வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ராட்சத வைரஸ்
கிரீன்லாந்தில் உள்ள பனி மூடிய ஆர்டிக் பிரதேசத்தில் ராட்சத வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக பாக்டீரியாவை விட 1000 மடங்கு சிறிய அளவில் உள்ள வைரஸ்கள் 20-200 நானோ மீட்டர்கள் அளவே இருக்கும்.
ஆனால், இந்த ராட்சத வைரஸ்கள் பாக்டீரியாவை விட பெரிதாக 2.5 மைக்ரோ மீட்டர்கள் என்ற அளவில் உள்ளன. இந்த வைரஸ்களால் நன்மையே விளையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தீர்வாக அமையுமா?
இந்த ராட்சத வைரஸ்கள் பனிக்கட்டிகள் உருகுவதைத் தடுக்க மறைமுகமான ஆயுதங்களாக செயல்படுகிறதாம். மேலும், பனியை சேதப்படுத்தும் ஆல்கே - களை அழித்து பனிக்கட்டி உருகாமல் இருக்க உதவுகிறதாம்.
ஆர்டிக் பிரதேசத்தில் காலநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகிறது. இந்நிலையில் அதற்கு தீர்வாக இந்த ராட்சத வைரஸ்கள் அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், இந்த வகை வைரஸ்கள் முதன்முறையாக 1981ல் கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தற்போதுதான் முதன்முறையாக ஐஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.