ஆபத்து.. 8 புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு, வீரியம் அதிகமா? - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
சீனாவில் புதிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன்பிறகு அந்த வைரஸ் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் என்பது தீவிரமாக பரவியது. 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்ட நிலையில் அந்த வைரஸ் பரவல் சீனாவில் இருந்து தான் பரவியதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின.
அந்த வைரஸ் தாக்குதலால் பல உயிர்கள் பறிபோயின, பின்னர் பல நாடுகளில் பொருளாதார நிலை பெரிய அடி வாங்கியது. மேலும், இது சீனா மற்ற நாடுகள் மீது தொடங்கிய பயோ வார் என்றும் பலர் கூறினர், ஆனால் சீனா அதனை மறுத்து வந்தது.
புதிய வைரஸ்கள்
இந்நிலையில், சீனாவில் தெற்கு கடற்கரையில் உள்ள ஹைனான் தீவில் புதிதாக 8 வைரஸ்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ்கள் மனிதர்களை தாக்கும் தன்மையுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றன.
இந்த 8 வைரஸ்களில் ஒரு வைரஸ் SARS-CoV-2 எனும் கொரோனா வைரசுக்கான குடும்பத்தை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த புதிய வைரஸ்கள் பரவ தொடங்கினால் மனிதர்களையும் தாக்கும் தன்மையை கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.