சீனாவை அழித்து கொண்டிருக்கும் வீரியமிக்க புது வகை வைரஸ் - அச்சத்தில் மக்கள்!
தற்போது சீனாவில் புது வகை கரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கரோனா வைரஸ்
கடந்த 2019-ம் ஆண்டு முதல் முறையாக கரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவி உலக நாடுகள் அனைத்தும் தாக்கப்பட்டது.
இந்த வைரஸால் பல நாடுகளில் பல உயிர்களை இழக்க நேர்ந்தது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடக்கப்பட்டு, பல நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து பெரும் அளவில் அடிவாங்கியது.
வறுமையானாலும் பல மக்கள் உயிரிழந்தனர், இன்னும் அந்த வைரஸின் தாக்கம் குறையவில்லை.
குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. மேலும், இதனை சீனா திட்டமிட்டு செய்ததாக பல நாடுகள் குற்றச்சாட்டு வைத்தனர்.
புது வகை வைரஸ்
இந்நிலையில், தற்போது சீனாவில் புது வகை வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது.
இது XBB என்ற உருமாறிய புது வகை கரோனா வைரஸ். இது தற்பொழுது வீரியத்துடன் மிக வேகமாக பரவி வருகிறது.
இதனால் இந்த மாதம் இறுதிக்குள், ஒரே வாரத்தில் 4 கோடி பேரைத் தாக்கும் என்றும், அடுத்த மாதத்தில் உச்சத்தை எட்டும் என்றும் மருத்துவர்கள் கணித்து கூறுகின்றனர்.
இந்த புதிய வகை வைரஸை எதிர்கொள்வதற்காக சீனாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.