மக்களவை தேர்தல்; இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள்! என்னென்ன விதிமுறைகள்?
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல்கட்ட வாக்கு பதிவு நடைபெறுகின்ற நிலையில் இன்றுடன் பரப்புரை நிறைவடைகிறது.
மக்களவை தேர்தல்
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி என அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வந்தனர். இதனால், களம் சற்று விறுவிறுப்பாக இருந்தது.
தமிழகத்தில் முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெற ஓர் நாள் மட்டுமே உள்ள நிலையில், அறிவுறுத்தலை மீறி பரப்புரை செய்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விதித்துள்ளது.
தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி வாயிலாகவும் பரப்புரை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
இன்றுடன் பிரசாரம் நிறைவடைவதால் அனைத்து தலைவர்களும், இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்துவிடும்.
நாடு முழுவதும் மொத்தம் 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகள் முதல்கட்ட தேர்தல் நடக்கவிருக்கிறது.இன்று மாலை பிரச்சாரம் முடிந்தவுடன் தொகுதி சாராத வெளியூர் நபர்கள் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும், ஹோட்டல்கள் விடுதிகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்ற நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் தொடர்பான கூட்டம் , ஊர்வலம் நடத்தவோ அதில் வேட்பாளர் பங்கேற்கவும் கூடாது. இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் திரையரங்குகள் வாயிலாக பரப்புரை செய்யக்கூடாது . விதிமுறைகளை சட்டப்படி தக்க தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.