மக்களவை தேர்தல் - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சின்னம் ஒதுக்கீடு!

Tamil nadu O. Panneerselvam Ramanathapuram Lok Sabha Election 2024
By Jiyath Mar 30, 2024 02:00 PM GMT
Report

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தல்

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல் - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சின்னம் ஒதுக்கீடு! | Jackfruit Symbol Allotted To O Panneerselvam

இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

மக்களவை தேர்தல் 2024 - மதிமுக, விசிகவுக்கு சின்னம் ஒதுக்கீடு!

மக்களவை தேர்தல் 2024 - மதிமுக, விசிகவுக்கு சின்னம் ஒதுக்கீடு!

பலாப்பழம் சின்னம்

அதே தொகுதியில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் மொத்தம் 6 பேர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். ஒரே பெயரில் 6 பேரும் சுயேட்சையாக தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதால் தேர்தலில் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மக்களவை தேர்தல் - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சின்னம் ஒதுக்கீடு! | Jackfruit Symbol Allotted To O Panneerselvam

இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்டுள்ளது.