நமக்கு 50 வருஷம் ஆனாலும் வராது - கண்ணை காட்டும் அம்பானியின் ஒரு மாசம் ஈபி பில் தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Nita Ambani
By Karthick Jul 25, 2024 06:32 AM GMT
Report

உலகையே தன்பக்கம் கவனம் பெற வைத்து வருகிறார் அம்பானி.

அம்பானி

பிரபலங்களை மீது நம் கவனம் எளிதாக விழுவது இயல்பே. அப்படி தான் மக்களின் கவனத்தை எளிதாக ஈர்த்தவர்களில் ஒருவராக இருக்கிறார் அம்பானி. உலகின் பணக்காரர்களில் ஒருவரான அம்பானி, தொடர்ந்து இந்திய அளவில் முன்னணியிலேயே இருக்கிறார்.

The Ambani family

அவரின் பல நடவடிக்கைகளும் மக்களிடம் பேசும் பொருளாக மாறிவிடுகிறது. காரணம் ஆடம்பரம் என்றாலும், அது நம்மை ஆச்சரியப்படுத்த தவறுவதில்லை. மகனின் திருமணத்தை 5000 ஆயிரம் கோடி கொட்டி நடத்தி முடித்து விட்டார்.

Anant Ambani and Radhika Merchant

கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கி தற்போது வரையில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு செய்தி திருமணம் தொடர்பாக வெளிவந்து மக்களின் கவனத்தை பெற்று கொண்டே தான் இருந்தன. திருமணம் முடிந்தாகி விட்டது. மணப்பெண் மாப்பிள்ளை வீட்டிற்கும் வந்து விட்டார். இந்த மாப்பிள்ளை வீடே ஒரு பெரிய ஆயாசமாக இருக்கிறது. அதில் மற்றுமொரு அதிசயமும் உள்ளது.

ஈபி பில்

உங்க வீட்டில் ஈபி பில் எவ்வளவு இருக்கும். சுமாராக ஒரு 500-600 வந்தாலே, நமக்கு கண்ணை காட்டும். அம்பானி வீட்டு ஈபி பில் கணக்கு சொன்ன உங்களுக்கு தலையே சுத்திடும். அவர் கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பரில் சுமார் 70 லட்சம் ஈபி பில் காட்டினாராம். அடேங்கப்பா..இப்போ சொல்லுங்க தலை சுத்துதா.

Inside of Ambani house

இது சராசரியாக 7000 வீட்டின் ஈபி பில் என்றும் அப்போதே கூறப்பட்டது. அப்படி என்னடா இருக்கு அந்த வீட்டில் என்றால், ஒவ்வொறொன்றாக பார்ப்போமா? ஆன்டிலியா என்ற அந்த வீடு 4 லட்சம் சதுர அடி பரப்பளவு. 6 ஆண்டுகள் வேலை. ரூ.15,000 கோடி செலவு.

பரம்பரையே இப்படி தான் - அம்பானி குடும்பத்தில் கணவரை விட மனைவிகள் தான் வயதில் மூத்தவர்களாம்!!

பரம்பரையே இப்படி தான் - அம்பானி குடும்பத்தில் கணவரை விட மனைவிகள் தான் வயதில் மூத்தவர்களாம்!!

வீட்டில் இப்பொது எத்தனை பேர் என்றால் அம்பானி அவரின் மனைவி நீடா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி - ஸ்லோக்கா அம்பானி மற்றும் 2 குழந்தைகள், மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட். இவர்களுக்கு பணிபுரிய மட்டும் சுமார் 600 பணியாளர்கள் வேலை செய்கிறார்களாம்.

Inside of Ambani house

மொத்தம் 27 மாடிகள். கார்களை நிறுத்தவே தனி பார்க்கிங் தளங்கள் என துவங்கி, வீட்டிலேயே மினி தியேட்டர், மாடியில் ஹெலிபேட், நீச்சல் குளங்கள் என உள்ளதாம்.