பரம்பரையே இப்படி தான் - அம்பானி குடும்பத்தில் கணவரை விட மனைவிகள் தான் வயதில் மூத்தவர்களாம்!!
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது.
அம்பானி மகன்
திருமணம் ஆசியாவின் மிக முக்கிய பணக்காரர்களில் ஒருவரான அம்பானி வீட்டின் கடைசி திருமணம் நடந்து முடிந்துள்ளது. உலக வந்து வாழ்த்தியது போல, பலரும் வந்து வாழ்த்தி விட்டார்கள்.
ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் நம்ப சூப்பர்ஸ்டாரையும் ஒரு ஸ்டேப் போட்டுவைத்து விட்டார்கள். அந்த அளவிற்கு ஆடம்பரம். சுமார் 5000 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த திருமணம் நடந்து முடிந்ததாக தகவல் உள்ளது.
செலவை கேட்டால் தலை சுற்றுகிறது என்றால், அது அம்பானியின் சொத்தில் வெறும் 0.5 சதவீதம் தானாம். அம்பானி குடும்பத்தின் பல விஷயங்களும் நம்மை அசத்தி வருகிறது. அப்படி தான் மற்றுமொரு விஷயம் வெளிவந்துள்ளது.
வயது அதிகம்
அதாவது, அம்பானி குடும்பத்தில் மருமகளுக்கு பெரும்பாலும் கணவரை விட வயது அதிகம் தானாம். அனில் அம்பானி - டீனா அம்பானி தம்பதிகளை தெரியாதவர்களே இருக்க முடியாது.
அனில் அம்பானியை விட டீனா 2 வயது மூத்தவராம். டீனா - 1957 ஆம் ஆண்டிலும் அனில் அம்பானி 1959ஆம் ஆண்டிலும் பிறந்தவர்கள்.
முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி - ஸ்லோகா மேத்தா தம்பதிக்கு 1 வயது வித்தியாசம். 1990ஆம் ஆண்டில் ஸ்லோகா மேத்தா, ஆகாஷ் அம்பானி 1991ஆம் ஆண்டிலும் பிறந்தார்கள் ஆவார்கள்.
அதுவே தொடருகிறது. ஆனந்த் அம்பானி திருமணத்திலும். ராதிகா மெர்ச்சண்ட் பிறந்தது 1994ஆம் ஆண்டு. ஆனந்த் 1995ஆம் ஆண்டில் பிறந்தவர் ஆவார்