ஆனந்த் அம்பானியின் துணை மாப்பிளைக்குகளுக்கு 2 கோடியில் வாட்ச்!!அப்படி என்னடா இருக்கு அதுல?
ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டங்கள் மும்பை நகரில் கலைக்கட்டியுள்ளது.
அம்பானி திருமணம்
நேற்று முன்தினம் ஜூலை 12-ஆம் தேதி ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்து விட்டது. ஆனாலும், திருமண கொண்டாட்டங்கள் இன்னும் முடிந்திடவில்லை. நம்ப சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும் நடனமாட விட்டார்கள் அம்பானிகள்.
சுமார் 5000 கோடி செலவு செய்துவிட்டார் அம்பானி என தகவல் வெளிவந்துள்ள நிலையில், தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.அதாவது, ஆனந்த் அம்பானியின் துணை மாப்பிளைகளுக்கு சுமார் 2 கோடியில் வாட்ச் பரிசளிக்கப்பட்டுள்ளது.
வாட்ச்
சரி அந்த வாட்சில் என்னதான் இருக்கு என பார்க்கலாமா?
ஆனந்த் அம்பானி பரிசளித்த வாட்ச் 41 மிமீ 18கிராம் இளஞ்சிவப்பு தங்க கேஸ், 9.5 மிமீ தடிமன், நீலக்கல் பொருந்திய படிக பின்புறம் கொண்டுள்ளது. இது கிராண்டே டேபிஸ்ஸரி பேட்டர்ன் (Grande Tapisserie Pattern) வகையில் ப்ளூ கவுண்டர்கள், பிங்க் கோல்ட் ஹவர் மார்க்கர்கள் மற்றும் ராயல் ஓக் கைகள் கொண்ட இளஞ்சிவப்பு தங்க நிற டயலைக் கொண்டுள்ளது.
வாட்ச் ஒரு இளஞ்சிவப்பு தங்க நிறமுள்ள உள் புறத்தில் காலிபர் 5134 சுய-முறுக்கு இயக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது வாரக் குறிப்பீடு, நாள், தேதி, வானியல் நிலவு, மாதம், லீப் ஆண்டு மற்றும் மணிநேரங்கள் மற்றும் நிமிடங்களைக் காட்டுகிறது.
இது 40 மணிநேர பவர் ரிசர்வ் வழங்குகிறது மற்றும் 18K இளஞ்சிவப்பு தங்கத்துடன் AP மடிப்பு கொக்கி மற்றும் கூடுதல் நீல பட்டையும், 20 மீட்டர் வரை water resistant'உம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.