5000 கோடி காலி!! மகன் கல்யாணத்தால் அம்பானி சொத்து அம்பேலா? திடுக்கிடும் தகவல்
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்து விட்டது.
அம்பானி திருமணம்
நாம் கவர்ந்த நட்சத்திரங்கள், பிடித்த விளையாட்டு வீரர்கள், உலகை இயக்கி வரும் தொழிலதிபர்கள், role model முன்னணி நபர்கள் என சொல்லப்போனால் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த உலகமும் வந்து வாழ்த்திவிட்டு சென்றுவிட்டது அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு. துவக்கம் முதலே பல ஆச்சரியங்களை மக்களுக்கு மகனின் திருமணம் மூலம் கொடுத்து வருகிறார் அம்பானி.
ஜாம் நகரை ஜுரம் வர வைத்தது 3 நாள் வைபவம். அதனை தொடர்ந்து தண்ணீரில் மிதந்து கொண்டே கப்பலில் ஒரு குத்தாட்டம். இதற்கிடையில் பிரபல பாடகர்கள் ரிஹானா - ஜஸ்டின் பைபர் வந்து பாடி விட்டு சென்றார்கள். தொடர்ந்து மக்களை ஆச்சரியப்படுத்திய அம்பானி, உலக நட்சத்திரங்களை ஒரே இடத்தில் மகனின் திருமணத்திற்கு குவித்து விட்டார்.
கோடி கணக்கில் பணத்தை கொட்டி நடைபெற்று முடிந்துள்ள இந்த திருமண செலவு குறித்து செய்திகள் உங்களுக்கு heart attack வர வைக்கலாம். நீங்க கொஞ்சம் யூகிச்சி பாருங்க. எவ்வளவு இருக்கும்'னு. ஒரு 1000 கோடி யோசிப்பீங்களா? அத 5 மடங்கா அதிக படுத்துங்க. சுமார் 5000 கோடி செலவில் இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது. அம்மாடியோ'னு வாயா பொலக்காதீங்க.
என்னடா எனக்கு heart attack வரல'னு சொல்றீங்களா. இப்போ பாருங்க. செலவானது மொத்தம் 5000 கோடி. என்ன அம்பானி சொத்து'ல பெருசா செலவு செஞ்சிட்டாரு'னு மட்டும் யோசிச்சீராதீங்க. இந்த 5000 கோடி என்பது அவரின் சொத்தில் வெறும் 0.5% மட்டும் தானாம்.
இப்போ லைட்டா வலிக்குதா.
எழுதுற எனக்கும் அப்படி தான் இருக்கு. அவளோ சொத்து இருக்கு அம்பானிக்கு. அதனால் தான் நம்ப தலைவர் கூட, ஒரு ஸ்டேப் போட்டுட்டு வந்தாரு போல.