நாய் சிறுநீர் கழித்ததால் துப்பாக்கிச்சூடு - போலீசார் விசாரணை
வீடு கட்டுவதற்காக கொட்டி வைத்திருந்த மண்ணில் நாய் சிறுநீர் கழித்த தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுநீர் கழித்த நாய்
உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டம் திடவி கிராமத்தை வசித்து வருபவர் சுக்ராம்பால் (48). இவர் அந்த கிராமத்தில் புதிதாக வீடு கட்டி கொண்டிருக்கிறார்.
வீடு கட்டுவதற்காக வாங்கிய மண்ணை வீட்டின் அருகே கொட்டி வைத்திருந்தார். இதனிடையே, சுக்ராம்பால் வீடு கட்டும் வேலைகள் நடைபெற்று வரும் பகுதி அருகில் ஆஷு என்பவரின் வீடு உள்ளது.
ஆஷூ நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், ஆஷூவின் நாய் இன்று சுக்ராம்பாலின் வீடு கட்டும் வேலைக்காக வைத்திருந்த மண் மீது சிறுநீர் கழித்துள்ளது.
துப்பாகிச்சூடு
இது குறித்து ஆஷூவிடம் சுக்ராம் கண்டனம் தெரிவித்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆஷூ தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடிரென சுக்ராமை சுட்டார். இதில், சுக்ராம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சுக்ராம்பாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குடிபோதையில் காவல்துறை அதிகாரியை தாக்க முயன்ற பெண் - வைரலாகும் வீடியோ..!