சர்ச்சையை கிளப்பிய கேட்ச்.. நடுவருடன் வாக்குவாதம் செய்த மும்பை அணி வீரர்கள்
சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணி வீரர்கள் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவிமும்பையில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி 0 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
தொடர்ந்து பேட் செய்த சென்னை அணியை கடைசி பந்தில் பவுண்டரி அடித்து தோனி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதனிடையே நடப்பு சீசனில் நடுவரின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் சென்னை அணி பேட் செய்த போது ஆட்டத்தின் 8 ஓவரை அறிமுக சுழற்பந்துவீச்சாளர் ஹிர்த்திக் வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தில் உத்தப்பா 21 ரன்கள் எடுத்த போது, அடித்த பந்தை பந்துவீச்சாளர் ஹிர்த்திக்கே தாவி பிடித்தார்.
இதனையடுத்து விக்கெட் இழந்ததாக மும்பை இந்திய அணி வீரர்கள் கொண்டாடினர். ஆனால் கள நடுவர் இதில் சந்தேகம் இருப்பதாக கூறி மூன்றாம் நடுவரின் உதவியை நாடினார். இதன் ரீப்ளே காட்சியில் ஹிர்த்திக் பந்தை பிடிக்கும் போது, அது தரையில் பட்டது போல் ஒரு கேமிரா ஆங்களில் தெரிந்தது. இது போன்ற ரீப்ளேவில் தெளிவான ஆதாரங்கள் இல்லை என்றால் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக அறிவிக்கலாம் என்பதன் படி அதனை மூன்றாம் நடுவர் நாட் அவுட் என்று அறிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நடுவர் விளக்கம் அளித்ததை அடுத்து, மும்பை அணி வீரர்கள் கலைந்து சென்றனர்.