‘வெண்ணிலா கபடிக்குழு’ பட பாணியில் - விளையாடும் போது உயிரிழந்த கபடி வீரர்..!
‘வெண்ணிலா கபடிக்குழு’ பட பாணியில் விளையாடும் போது வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த வீரர்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி, புரங்கனி கிராமத்தைச் சேர்ந்தவர் விமல் ராஜ் (26). இவர் சேலம் கணேஷ் கல்லூரியில் 2ம் ஆண்டு ஜியலாஜி படித்து வந்தார்.
நேற்று இரவு மாணவர் மாநடி குப்பத்தில், மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட விமல், கபடி போட்டிக்கு களம் இறங்கி விளையாடினார். அப்போது, விமல் விளையாடும்போது, அரங்கிலேயே மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.