மின்னல் வேகத்தில் இடித்த பஸ்... நூலிழையில் உயிர் தப்பிய நபர் - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்

Viral Video Accident
By Nandhini 4 மாதங்கள் முன்

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ஒருவர் பைக்கில் ஹெல்மேட் அணிந்து மின்னல் வேகத்தில் வந்துக்கொண்டிருக்கிறார். பைக் திரும்பும் போது, எதிர்பாராத விதமாக ஒரு பஸ் ஒன்று விரைந்து வந்தது. அப்போது, பைக் மீது பஸ் மோதி அந்த நபர் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். அப்போது, டிரைவர் சட்டென ப்ரேக் அடித்து பஸ்சை நிறுத்தினார். இதைப் பார்த்து பதறிப்போன அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை பஸ் அடியிலிருந்து தூக்கினர். அவர் ஹெல்மேட் அணிந்திருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், ஹெல்மேட் எவ்வளவு நமக்கு முக்கியம் என்பதை இந்த வீடியோ உணர்த்தியுள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

accident