கொலை செய்து உடலை சமைத்து குழந்தைகளையும் சாப்பிட வைத்த சைக்கோ நபர்!
போதையில் கொலை செய்த நபரை தான் சாப்பிட்டது மட்டுமல்லாமல், தன் குழந்தைகளையும் சாப்பிட வைத்த சம்பவம் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது.
போதையில் கொலை
ரஷ்யாவை சேர்ந்த விளாடிமிர்(63) என்ற நபர் இருவரைக் கொலை செய்த வழக்கில் 1997ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவரை, கஜகஸ்தானில் உள்ள K-6 பிளாக் டால்ஃபின் சிறையில் அடைத்தனர்.
அதன் பிறகு நேஷனல் ஜியோகிராஃபி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் போது திடுக்கிடும் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ஒரு முறை பார்ட்டி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, விளாடிமிருக்கும் சாலையில் இன்னொருவருக்கும் கைகலப்பு நடந்துள்ளது.
மாமிச சமையல்
அதில் தன்னுடன் சண்டைக்கு வந்த நபரை விளாடிமிர் கொன்றுவிட்டார். அதன் பின்னர் பாத்ரூமிற்கு அந்த உடலை எடுத்து சென்று விளாடிமிர் அதை துண்டாக்கிக்கொண்டிருக்கையில் தான் மாமிசத்தைச் சுவைத்துப்பார்க்கும் எண்ணம் அவருக்குள் தோன்றியுள்ளது.
தொடைப்பகுதியை வேகவைத்து, விளாடிமிர் முதலில் சுவைத்துள்ளார். அதன் சுவை பிடிக்காததால், அதை இன்னும் சிறு துண்டுகளாக வெட்டி, வறுத்து உண்டதாக அவர் தெரிவித்தார்.
டம்ப்லிங்க்ஸ்
இத்துடன் சேர்த்து அவர் சொன்ன மற்றொரு விஷயம் தான் இன்னும் அதிர்ச்சிகரமாக இருந்தது. மாமிசத்தை தன் வீட்டிற்கு எடுத்து தன் மனைவியிடம் கொடுத்துள்ளார்.
அதில் டம்ப்லிங்க்ஸ் செய்து அவர்களது குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளனர். அதை கங்காருவின் மாமிசம் என்று சொல்லி கொடுத்ததால், குழந்தைகளும் விஷயம் தெரியாமலே சாப்பிட்டுள்ளனர்.
கங்காரு இறைச்சி
மேலும் இவர் மனித இறைச்சியை கங்காருவின் இறைச்சி என்று சொல்லி 5 கிலோ வரை விற்றுள்ளார். இறைச்சியை வாங்கிய பெண் ஒருவர், அதன் சுவையில் வித்தியாசம் இருந்ததால், அதை மருத்துவரிடம் எடுத்து சென்று சோதித்துள்ளார்.
அப்போது தான் அது மனித மாமிசம் என்று கண்டறிந்துள்ளனர். அதன் பின்னர் தான் போலீஸிடமும் சிக்கியுள்ளார் விளாடிமிர். கொலை செய்த குற்றத்திற்காகவும், மனித இறைச்சியை விற்றதற்காகவும்,
ஆயுள் தண்டனை
குழந்தைகளை ஏமாற்றி சாப்பிடவைத்ததற்காகவும் அவருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாறியது குறிப்பிடத்தக்கது.