மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள் : கள்ளகுறிச்சி விவகாரத்தில் கொந்தளித்த நீதி மன்றம்
கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
கலவரமான கள்ளக்குறிச்சி
மாணவியின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய பெற்றோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவு பேரில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது . அதன்படி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க இருந்த நிலையில் பெற்றோர் மாணவி உடலை வாங்க மறுத்தனர்.
மறு பிரோத பரிசோதனை
இதனிடையே மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அவரது குடும்ப அவரது வீட்டில் நோட்டீசும் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மாணவியின் இரண்டாவது பிரேத பரிசோதனையில் புதிதாக ஏதும் கண்டுபிடிக்கவில்லை என தடயவியல் நிபுணர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சரி பார்த்துக் கொள்ளலாம் என்று கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.
நீதி மன்றம் சரமாரி கேள்வி
இதையடுத்து வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் , நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவி உடலை பெற்றுக் கொள்வதில் ஏன்? தாமதம் ஒவ்வொரு முறையும் பிரச்சனையை ஏற்படுத்துகிறீர்கள்.
அமைதியாக தீர்வு காண வேண்டும். நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா ?என்று கேள்வி எழுப்பினார் . அத்துடன் மாணவியின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்டாதீர்கள்?
பெற்றோர் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது.கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் சிலர் ஆதாயம் தேடுகின்றனர்.
இறுதிச்சடங்கை கண்ணியமாக நடத்துங்கள், மாணவியின் ஆன்மா இளைப்பாறட்டும். என்றும் , மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்று கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் .