ஆசிரியர்களை நியமிப்பதில் சமரசம் கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிப்பதில் சமரசம் கூடாது எனவும், அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வி தரத்தை ஆராய வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றம் இன்று கல்லூரி உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில் கல்லூரியில் ஆசிரியர்களை நியமிப்பதில் சமரசம் கூடாது. ஆசிரியர்களின் கல்வி தகுதி மிக முக்கியம் எனவும், பச்சையப்பன் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ள உதவி பேரரசியர்களின் கல்வி தரத்தை ஆராய உத்தரவு வந்துள்ளது.
கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களின் கல்வி தரத்தை ஆராய்ந்து, கல்லூரி கல்வி இயக்குனர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.