கொஞ்சம் பொறாமை தான் - அம்பானி வளர்ப்பு நாய் வைத்திருக்கும் காரின் விலை தெரியுமா?
அம்பானி வீட்டில் எல்லாமே நமக்கு ஆச்சரியம் தான். அப்படி ஒரு விஷயம் தான் இதுவும்.
ஹாப்பி அம்பானி
அம்பானி திருமணத்தில் பலரின் கவனத்தை பெற்ற ஒரு விஷயமாக இருந்தது அம்பானிகளின் வளர்ப்பு நாய். திருமணத்தில் ஒய்யாரமாக புது உடை அணிந்து கொண்டு பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மத்தியில் வளம் வந்தார் அவர்.
Golden retriever breed'ஆன அந்நாய் ஹாப்பி அம்பானி என பெயர் பெற்றுள்ளது. ஹாப்பி அம்பானி, அம்பானி குடும்பத்தில் ஒருவராகவே உள்ளது. அம்பானிகளை போலவே ஆடம்பர வாழ்க்கையையே வாழ்த்து வருகிறது நம்ப ஹாப்பி அம்பானி.
3 கோடியில்..
இதில் குறிப்பிடத்தக்க விஷயமென்னவென்றால், ஹாப்பி அம்பானி luxury கார்களை வைத்துள்ளது. ஹாப்பி அம்பானி, ரூ.3 கோடி மதிப்புள்ள Mercedes-Benz G400D மாடல் காரில் ஹாயாக பயணம் செய்து வருகிறது.
இதற்கு முன்பாக, அந்நாயிடம் 50 லட்ச மதிப்பிலான டொயோட்டா fortuner ரக கார் இருந்துள்ளதாகவும் தகவல் இருக்கிறது. படிக்கும் போதே சற்று பொறாமையாக உள்ளது அல்லவா.