நடிகர் விஜய்யின் கன்னத்தில் பளார் என அறைந்ததால் பரபரப்பு..!
படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யின் கன்னத்தில் அவரது தந்தை பளார் என அறைந்ததாக கூறப்படுகிறது.
சினிமாவில் அறிமுகப்படுத்திய தந்தை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். ஆரம்ப கட்டத்தில் அவரது தந்தை சந்திரசேகர் நடிகர் விஜய்யை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தினார்.
என்ன தான் தனது மகனாக இருந்தாலும் திரைப்பட படப்பிடிப்பின் போது விஜய்யை ஒரு நடிகராக தான் பார்த்து வந்துள்ளார்.

விஜய் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் விரைவில் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு
இந்த நிலையில் அவரது தந்தை படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யின் கன்னத்தில் அறைந்ததாக செய்திகள் பரவின.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக வில்லன் கதாபாத்திர நடிகர் பொன்னம்பலம் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில் அந்த சம்பவம் உண்மை தான். விஜய் ஒரு காட்சியில் சரியாக நடிக்கவில்லை என்பதால் அவரது தந்தை அடித்தார் என தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil