தேவையில்லாம அப்படி இருந்தான் ...அதான் கவின அடிச்சேன்!! 5 ஆண்டுகள் பிறகு சொன்ன பிரதீப்!!
தனது நண்பர் கவினை தான் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த போது அடித்தேன் என்ற உண்மையை பிரதீப் 5 ஆண்டுகள் கழித்து தற்போது பிக் பஸ் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
கவின் பிரதீப் விவகாரம்
தற்போது பிஸியான நடிகராக கவின் இருக்க முக்கிய காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கூறலாம். சின்னத்திரை நட்சத்திரமாக இருந்த அவருக்கு புகழை அதிகரித்தது அந்நிகழ்ச்சி தான். அதே போல தான், இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை ரசிகர்களிடத்தில் பேசும் பொருளாகவே இருந்து வருபவர் பிரதீப்.
சினிமா துறை சேர்ந்த இவர், கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது, வீட்டிற்க்குள் கெஸ்ட்டாக வந்த போது, கவினை "பளார்" என அறைந்திருந்தார். அது பெரும் வைரலானது. ஆனால், எதற்காக பிரதீப் அச்செயலை செய்தார் என்ற காரணம் தற்போது வரை வெளிவரவில்லை.
அதனால தான் அடிச்சேன்..!
இந்நிலையில் தான், அந்த நிகழ்வு குறித்து 5 ஆண்டுகள் கழித்து பிரதீப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மனம் திறந்துள்ளார். இது குறித்து அண்மையில் விசித்ரா பிரதீபிடம், "ஏன்டா அப்படி பண்ணா" என கேட்க, அதற்கு என் மேல நெகட்டிவிட்டி வாங்க - அவர் மேல இருக்கிற நெகட்டிவிட்டியை போக்க தான் என்றார் பிரதீப்.
மக்கள் என்னை பத்தி பேசுவாங்க என்ற ஸ்டேடர்ஜி தான் என்று சொல்ல, அதற்கு விசித்திரா எப்படி ஒர்க் ஆகும் ஸ்டேடர்ஜி என்று கேட்க, அப்படி பண்ண என்னதான எல்லாரும் திட்டுவாங்க - அவன் மேல அந்த டைம்ல காதல் என்கிற ஒரு நெகட்டிவிட்டி இருந்தது என கூறிய பிரதீப். அதை மாத்துறதுக்காக தான் நான் அப்படி பண்ணுனேன் என்று கூறினார் பிரதீப்.