குடும்ப மானமே போகுது; ஐஷூவ வெளிய அனுப்புங்க - பிக்பாஸ் வீட்டிற்கே சென்ற பெற்றோர்!
முத்த விவகாரத்தில் ஐஷுவின் பெற்றோர் வருத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஆரவாரமாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது, ஐஷு - நிக்சனின் மிரர் முத்தம் தான் படுவைரலாகியுள்ளது. இதனால், ஐஷுவின் பெற்றோர் வருத்தமடைந்ததால்,
இரு தினங்களுக்கு முன் நேரடியாக பிக் பாஸ் செட்டுக்கே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சின்னத்திரை வட்டாரங்கள், ஐஷுவின் அப்பாவும் அம்மாவும் பிக் பாஸ் வீடு இருக்கிற பூந்தமல்லி இ.வி.பி.செட்டுக்கே வந்துட்டாங்க.
முத்த விவகாரம்
கண்ணாடி வழியே அவங்க ரெண்டு பேரும் முத்தம் பரிமாறிக்கிட்ட அந்த எபிசோடைப் பார்த்து அவங்க ரொம்பவே மனசு உடைஞ்சு போயிருக்காங்க. குடும்ப மானம் போகுது. இனி ஒரு நாள் கூட இந்த ஷோவுல எங்க பொண்ணு இருக்க வேண்டாம்.
தயவு செய்து அவளை வெளியில் அனுப்பிடுங்கனு கேட்டாங்க. ஒரு போட்டியாளருக்காக விதிமுறைகளை மீறினா அது தவறான முன்னுதாரணமாகிடும்னு சொன்ன நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், ஐஷுவிடம் அவருடைய அப்பா அம்மா சொல்ல விரும்பியதை மட்டும் கேட்டு, தாங்களே சொல்லி எச்சரிப்பதாகச் சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.
அதன்பின், அந்த தகவலும் ஐஷூவுக்கு அனுப்பப்பட்டதாகவே தெரிகிறது. இதற்கிடையில், முத்தம் கொடுத்துக்கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video