காதலை ஒத்துக்கொண்ட தர்ஷன்; காதலி சனம் ஷெட்டி இல்லை - அப்போ இவரா?
நடிகர் தர்ஷன் தனது காதல் குறித்து முதல் முறை பேசியுள்ளார்.
நடிகர் தர்ஷன்
இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் தர்ஷன். மாடலிங்க் துறையில் வலம் வந்தார். பின்னர் விளம்பரப்படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து, பிக் பாஸ் 3 ஆவது சீசனில் பங்கேற்றார். அதில் தனக்கென ரசிகர்களை கவர்ந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு, கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்தார். தற்போது நாடு என்ற படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த பட புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
காதல்
அந்த வகையில், அளித்த பேட்டி ஒன்றில் காதல் தொடர்பான கேள்விக்கு, “ காதல் வாழ்க்கை ரொம்ப கேவளமாக சென்று கொண்டு இருக்கீறது. எனக்கு ஒரு பெண் மேல க்ரஷ் இருக்கு. ஆனா அந்த பெண்ணுக்கு வேறு ஒருவரை பிடித்து இருக்கலாம். எல்லாருக்கும் இருப்பது போல் எனக்கும் க்ரஷ் இருக்கிறது.
அது இப்போது சொல்ல முடியாது. படங்கள் வருகிறது அதனால் அதில் கவனம் செலுத்தி வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனும், லாஸ்லியாவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து இருந்தார்கள். அதனையடுத்து, இருவரும்
அண்ணன், தங்கை இல்லை. காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.